1 சாணி மொழுகப்பட்ட சொளகின் மேடு பள்ளங்களாக முடையப்பட்டுள்ளது உயிர். 2. மட்டைகளை உரித்து உரித்து கைரேகைகளை இழந்த மகத்தான தேங்காய் உரியாளன் தன்னுடைய ஒரு கோடியாவது தேங்காயை கடப்பாறையின் தாயான கழுமரத்திலேறி உரிக்கிறான். 3. நிலா மங்கிய நாளில் வெள்ளரிப்பிஞ்சுகள் களவாங்க சும்மா கொடிகளுக்குள் சாக்கோடு நெளிந்தேன். தப்பிக்கையில் இடத்துப்பெரியாம்பளையிடம் ஆம்பட்டேன் எனது எளுறுக்கு புகையிலை கொடுத்து தனது களவுச்சரிதங்களை நடுக்கமெடுத்து வாசித்தார் விடிந்து வழியனுப்புகையில் வெடித்த வெள்ளரிப்பழத்தை கோரை படுக்கையிலிட்டு கைக்குழந்தையாகத் தந்தவர் விதைகளை…
கனவில் புழுவாய் உறங்கிய நான் விழித்தபோது வண்ணத்துப்பூச்சியாக கனவில் யார் முத்தமிட்டது வாழ்வு உதிர்ந்து போவதில் வருந்துவது ஏன்? அடர்வதற்கும் விழுவதற்கும் இடையிலான நொடிப்பொழுதில் ஒரு பறவை அதன் வாழ்வை வாழ்வதில்லையா? கண்டபோது கனவில் சொன்ன வார்த்தைகளில் மனம் பூத்துப் போனது கண்டபோது சொல்லாத வார்த்தையில் இல்லாமல் போகிறேன் இறந்தவரின் வீடு தாஜ்மஹால் ஆவதில்லை உலகத்தின் எந்த வீடும் ஆனால் எந்த வீடு தாஜ்மஹால் ஆகின்ற ஒரு…
அவள் இன்றைய பொழுதின் துன்பத்தைக் கடந்துவந்தது கொடும் சாபம் என்பேன் மித்ரா… பணி நெடுக அவளின் காட்சியே மீண்டும்.. மீண்டும்… மீண்டெழுந்தன இதற்கு முன்னர் ஏதோவொரு பேரங்காடியின் திருப்பத்தில் அவள் என்னைக் கடந்து போயிருக்கக் கூடும். அவள் தொட்டுணர்ந்து விட்டுச்சென்ற பொருட்களை நான் வாங்கி வந்திருக்கலாம் கூட்ட நெரிசலில் திடீரென எதிர்ப்பட்ட முகங்களில் தனித்த முகம் அவளுடையதாக இருந்திருக்கலாம். விழிகளின் திடீர் பரிச்சயத்தில் …
கடல் நாகங்கள் பொன்னி - கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை அயலகக் கவிதைகளைப் பொறுத்தமட்டில் அதன் வாசிப்பு என்பது சன்னலுக்குள்ளிருந்து வெளியில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கைப் பார்ப்பது போல் தான் கவனிக்கப்படுகின்றன. நானோ சன்னலுக்கு வெளியே நிகழும் சம்பவமாய் இருக்கிறேன். அப்படியானதொரு அடுக்குமாடியின் சன்னலை விட்டு கீழிறிங்கும் நாகமொன்று வளைந்து நெளிந்து இந்த நகரத்துக்குள் புகுந்து வெளியில் வருகிறது. இந்த நாகம் மொழிக்குள் அதீத ஆர்வத்துடன் நுழைந்து ஓடினாலும் சில நேரங்களில் திக்கற்றுப்போயும் திரிந்துகொண்டிருக்கிறது. என் அகந்தையையும்…