Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

சிவை

நேரசைக்கு 64 எழுத்துகள் நிரையசைக்கு 68 எழுத்துகள் அதுவே கட்டளைக் கலித்துறை என்கிறாள் காரைக்கால் அம்மை நானோ நிகோனர் பர்ராவின் ரோலர் கோஸ்டர்களை கவிதைக்குள் ஓட்ட முயல்பவன் தலை கீழாய் நடந்து உன் பதம் அடைவது என் இயல்பல்ல சிவையே

வேறு வழி?

Bynge Appஇல் ராஜேஷ் குமாரை பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள் என்றார் ஒரு நண்பர் ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள் என்றேன் நான் ஒரு வேண்டாத திகைப்பின் வாயை மூடுவதற்கு அடுத்த கண்டத்திலிருந்து கையைக்…

அதற்குள் மற்றொரு திரிபுற்ற வைரஸ் வந்துவிட்டது

நேற்றுத்தான் ஒன்று வந்தது போலிருந்தது அதற்குள் முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது ஒரு திரிபுருவுக்கும் இன்னொன்றுக்குமிடையே காலம் குறையக் குறைய எனக்கும் உனக்குமிடையே தூரம் அதிகமாகி மேலதிகமாகிறது இப்போதெல்லாம் உன் முகபாவனைகள் மாறிவிடவில்லையே பேசும்போது இப்போதும் உன் வலது புருவத்தை உயர்த்துகிறாயா …

தமிழுக்குப் பன்றிக் கறிச் சுவை

அந்தக் குகையில் தொடங்கி, இந்தக் குகையில் முடிகிறது எல்லாம். இடையில் நிகழும் கனவுகள் யாவும், பழுதுற்ற காலயந்திரக் குழப்பங்கள். தந்தை தேவைப்படாத முட்டைகள் பாடிக்கொண்டிருக்கின்றன, உள்ளே. வேட்டைநாய்கள், பசிமயக்கக் கனவுகளில் எஜமானனைக் குதறித் தின்கின்றன. காமத்தில் பிசைந்த உணவு, ஞானச்சுரப்புக்கான பத்திய…

பூங்குழலி கவிதைகள்

1. மிக கவனமாக ஒவ்வொரு பந்தாக தரையில் வீசி அதன் இசையைக் கேட்பதில் உற்சாகம் இயலுக்கு சில பொழுதுகளில் இவளின் வீசுதலுக்கு இடையே தரையில் அதன்போக்கில் அசையும் பந்துகளுக்கு அவளே ஒலி எழுப்புவாள் பிறிதொரு நாளில் மழைக்குளத்தில் பந்துகளை…

முனியாண்டி ராஜ் கவிதைகள்

எங்கள்_குடும்பம் ஆண்டுக்கொரு முறை வரவு செலவு போடும்போது மூத்த பிள்ளைகளைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வாய் அப்பா ஆடைகளிலிருந்து அரைஞாண்கயிறுகள்வரை அதில் தங்க இழைகள் மின்ன வேண்டும் உண்ண மறுக்கும் … ம்ம்ம் .. சோம்பல்படும் அவர்களுக்கு ஊட்டிவிட கரண்டியொன்று கக்கத்திலேயே…

இன்பா கவிதைகள்

1. நூறு முறை உன் கோபத்தை அனுபவித்திருக்கிறேன் ஒரு முறை தான் உன் மீது கோபம் கொள்ள முடிந்தது நூறு முறை உன் வெறுப்பைக் காட்டியிருக்கிறாய் ஒரு முறைதான் உன்னை வெறுக்க முடிந்தது எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன் …

கருணாகரன் கவிதைகள்

யாரும் சொல்லாத ஒன்றை யாரும் எண்ணாத ஒன்றை யாரிடத்திலும் இல்லாத ஒன்றை யாராலும் தந்து விட முடியாத ஒன்றை யாருக்குமே வாய்க்காத ஒன்றை யாராலும் யாராருக்குமே அளிக்கப்படாத ஒன்றை ஒரு போதுமே நிகழாத ஒன்றை ஒரு போதுமே நிகழ முடியாத, நிகழ்த்தவியலாத…

நேற்று மாலை என் ஜன்னலிலிருந்து ஒரு புறா குடும்பத்தைத் துரத்திவிட்டேன்

குடும்பத்திலிருந்த குஞ்சுப் புறா— சின்னஞ் சிறிய ரத்தச் சிவப்பு வாய் அதற்கு— என்னைப் பிடிக்காத என்னை நினைவுபடுத்தியது அது தன் அம்மாவைச் சுற்றிச் சுற்றி நடந்தது தன் அம்மாவின் குண்டு உடம்பின்மீது ஒட்டிக்கொண்டு தூங்கியது தன் அம்மாவின் வாயிலிருந்து ஹூம்…

தூசி படிந்த கறுப்புப் பெட்டிகள்

குற்ற உணர்வின்றி மகிழ்ச்சியாக இருப்பது கனவுச் சுருளின் மையத்துக்குள் இழுக்கிறது உறக்கக் கலக்கத்தோடு அறைக்கதவு தாழிடப்படுகிறது என் உயரத்தை ஒரு கை அளவிடுகிறது கூரையின் உயரம் சரிசெய்யப்பட்டதும் மின்விசிறி நிறுத்தப்பட வாகாக நாற்காலி  சுருக்கை இழுத்துப் பார்க்கும் கைகள் மூன்று இரண்டு ஒன்று சொல்வதற்குள் வியர்த்து விழிக்கிறேன் காலடியில் ஆடிக் கொண்டிருந்த குழந்தையின் தொட்டில் கயிறு பட்டென…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]