Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

மதார் கவிதைகள்

1. கூவிக்கொண்டும் அகவிக்கொண்டும் உறுமிக்கொண்டும் கீச்சிட்டும் குரைத்தும் இருந்தோம் மொழிக்கு முன்பு மொழி வந்தது நாசமாய்ப் போனது பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறோம் 2 காலை மாலையைப் போல நடிக்கிறது மாலையால் இரவு போல் நடிக்க முடிகிறது இரவு நடிப்பதில்லை அது அதன்…

குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்

1. கண்டடைய ஏதுமில்லை தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள் பாடல் மெருகேற மெருகேற கீழ்வானம் சிவக்கிறது வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள். 2. இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு பிரிந்தேன் சுமையை …

திருச்செந்தாழை கவிதைகள்

”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை” சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான் புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர் சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன ‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற…

கார்த்திக் திலகன் கவிதைகள்

1) குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன் அழகழகாய்த் தெறிக்கின்றன சொற்கள் 2) பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன வானம் லேசாகத் தூரலிட்டு அழத் தொடங்கியது ஏனின்று உலகம்…

வேல் கண்ணன் கவிதைகள்

1.முகவாதம் நேற்றிலிருந்து இடப்பக்க முகம் வலிக்கிறது முகவாதம் பீடித்த அப்பாவை மருத்துவமனைக்கு தனியாக அனுப்பிய நாட்கள் கடந்து பல வருடங்கள் ஆகின்றன 2.ஒவ்வொரு முறையும் உன்‌ வாசல் தேடி பிச்சை கேட்டு வந்த போதும் மறுத்த போதும் கதவுகளை அறைந்து சாத்திவிட்டு…

கதிர்பாரதி கவிதைகள்

சலோமியின் மீன் பருவக் கண்கள் 1 யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள் சலோமி. யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும் ‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக் கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி. இல்லையில்லை யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி. அவையெல்லாம் கிடையாது, சலோமி என்பவள்…

இன்பா கவிதைகள்

பல்லூழிக் காலப் பெரும் பூ என் அன்னை கிளம்பும் போது அவள் கைகளில் இருந்த பழம்பெரும் பூங்கொத்தை எனக்குக் கொடுத்துச் சென்றாள் நான் அதிலிருந்த பூ ஒன்றின் சிறு விதையை என் வீட்டுத் தொட்டியில் பதியமிட்டேன் மெல்ல கண் விழித்தது ஆயிரமாண்டு…

ஆனந்த் குமார் கவிதைகள்

1. ஒரு நதிக்குள் நிறைய நதிகள் இருக்கின்றன அதில் ஒன்று ஒரு மூலையில் கூழாங்கற்களை ரகசியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறது ஒன்று கரையை எட்டியெட்டிப் பார்க்கிறது ஒன்று பாறையில் ஏறி வழுக்கி விழுகிறது சிலதுகள் அமைதி சிலதுகள் சேட்டை ஒன்றிற்கு நீச்சல் தெரியவில்லை ஒன்றிற்குப்…

நிலா கண்ணன் கவிதைகள்

வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் உனக்கும் எனக்குமிடையில் நீளும் இச்சுவர்களில் உப்பின் ஈரம் பூத்திருக்கின்றது உனக்கு எத்தனை முறை சொல்வது.!? உன் மனம் மயில் அகவுவதைப்போல ஒலியெழுப்பிக்கொண்டிருக்கிறது நீயோ குனிந்த தலை நிமிராது கூடை முடைந்து கொண்டிருக்கின்றாய் பூவை தீபத்தில்…

ரவி அல்லது – கவிதைகள்

சச்சரவு. வெகு தூரம் வந்துவிட்டதாக விசனத்தின் வலியில் துடித்தழுதபொழுது அவன் ஆழ்துயிலில் இருந்தான் கிழவி விழித்திருந்தாள் வீடு அசைந்தாடியது காற்றின் போக்கில். *** பிரவாகம். இறுதி செய்யப்படாத எல்லா பிணக்குகளிலும் அவள் பூ முடைகிறாள். அவன் பூக்கொய்கிறான். …

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]