Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

தாகம்

இப்போதெல்லாம் எவ்வளவு தாகமாய் இருக்கிறது தெய்வீகக்காதல் கதையொன்றைக் கேட்பதற்கு ஆனாலும் இரவின் நிறம் அடரும் சுவர்களுக்குக்கூட உன்னையும் என்னையும் பற்றி நான் ஏன் சொல்லக் கூசுகிறேன் ஒரு இரகசியம் நழுவி நோக்கமற்ற குமிழியாய் உடைந்து வர்ணஜாலமிழக்கும் நீர்த்திவலைகளாவதை நான் விரும்பவில்லை என்றே…

ஊஞ்சல் மண்டபம்

ஆயிரமாயிரமானோர் கூடிக் கலையும் ஊஞ்சல் மண்டபத்தில் சமநிலை எங்கேயிருக்கிறது ஆயிரமாயிரமான கதாபாத்திரங்கள் கதைகளாகும் யாளித் தூண்களின் நடுவே சம நோக்கு எங்கேயிருக்கிறது யாரை நோக்கி இந்தக் கேள்விகளைக் கேட்பேன் நான் யாரிடமிருக்கிறது சமநிலைக்கான அக்கறைகள் என் கன்னக்கதுப்புகளில் துறவறத்தின் ரேகைகள் தோன்றிவிட்டனவா…

தூசு

எங்கும் வியாபித்திருக்கும் தூசு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் படிந்திருக்கும்போது அதில் நீ உன் ஆட்காட்டி விரலால் உன் காதலியின் பெயரை எழுதுகிறாய் தூசில் தொடங்கி தூசில் முடியுமென்ற விவிலிய வாசகத்தில் தூசில் எல்லாம் முடிவதை நீ அறிவாய் ஆனால் தூசில் எது…

ஈரப்பதம்

என்ன நாள், என்ன மணி என்ன மணி, என்ன நிமிடம் என்ன நிமிடம், என்ன நொடி என்ன நொடி குதிரையின் மூச்சிரைப்பு காற்றில் கனமாகக் கலந்திருக்கிறது ஈரப்பதம் நான் ஏன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? நான் ஏன் ஒரு மூலையில் சுருண்டு படுக்கலாகாது?…

மாத்ரி

மாத்ரி மகாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையருக்குத் தாய். குந்தியின் தேவர்களை வரவழைக்கும் மந்திரத்தைக் கடன்பெற்று அஸ்வினிதேவர்களாகிய இரட்டையர்களை அழைத்து நகுலன், சகாதேவனைப் பெற்றெடுத்தாள். மாத்ரி பேரழகி. பாண்டுவுக்கு மனைவியோடு உறவு கொண்டால் மரணம் சித்திக்கும் என…

சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி

1.மதமரபின் அந்தங்களின் அரசியலும், எதிர்மரபினரின் சிறப்பியல்பு அறியொணாத் 'தாரை வார்ப்பும்'! எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ் சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச்…

கால் நனைத்த அலைகள்

கவிஞர் கலாப்ரியாவின் கவிதை ஆளுமையும் அவரது கவிதை உலகமும் படைப்புலகம் அறிந்ததாக இருந்தாலும், சக கவிஞர்களின் கவிதைகளின் மீதான பார்வையையும், அவரது ரசனையையும் அறிந்துகொள்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் உதவுகின்றன. கலாப்ரியா ரசித்த கவிதைகளை திணைகளில் பகிர்ந்துகொள்கிறார். உள்ளடக்கம், வெளியீடு, கருத்தியல்…

அரவான்

ஒளியைக்கூட்டுங்கள் தலையை வெட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது என யாரோ கத்துகிறார்கள் நீ உன் நாடியை வெகுவாக உயர்த்தி என் பெயர் அரவான் என அறிவிக்கிறாய் முப்பத்திரண்டு அங்கலட்சணங்கள் கூடிய கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் சல்லியனையும் தவிர இவ்வுலகில் முழுமையான ஆண்…

ந. ஜயபாஸ்கரன் கவிதைகள்

மதுரையும் இவர் நடத்திய வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ஜயபாஸ்கரன், அர்த்தநாரி கவிதைத் தொகுதி வழியாக தமிழ் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் இலக்கிய, புராணங்களின்…

தாமரை பாரதி கவிதைகள்

அகாலம் செத்தவன் கால்களை மடக்க மீண்டும் உயிர்த்தது போல அந்த கரப்பான் பூச்சி மல்லாந்தபடிக் கணுக்கால்களை அசைக்கிறது ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் எங்கிருந்தோ முகம் காட்டிவிடுகிறது கழிவறை பீங்கான் வழவழப்பில் ஒலியேயின்றி நடக்கிறது சில நேரங்களில் நடப்பதும் சில…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]