சோளக்காடுகளுக்கு
குருவிகள் வரத் தொடங்கிவிட்டன.
விளைச்சலில்
நமது பங்கை எடுக்க வேண்டுமென்று
ஊரே
பொம்மைகள் செய்யத் தொடங்கியது
எல்லாம் ஆண் பொம்மைகள்
கண்கள் பெரிதாக, முறுக்கிய மீசையுடன்
தொப்பிப் போட்ட பொம்மைகள்.
காலங்காலமாக கதிர்களுக்கு நடுவே
ஆண் பொம்மைகள் நிற்பதைப்
பார்த்துப் பழகிய குருவிகள்
அஞ்சி அஞ்சி தானியங்களைத் தீண்டுவதையும்
வானில் வட்டமிட்டமிடுவதையும்
நான் விரும்பவில்லை.
நான் மட்டும் பெண் பொம்மை செய்தேன்.
சாயம் போகாத சிவப்புச் சேலை ;
நீலப்பூ பூத்த வெள்ளை ரவிக்கை ;
தொடைவரை சவுரி முடி !
கொத்தாக வைத்த ஆவாரம்பூ;
பாலாடையில் கோலியை வைத்து
சுண்ணாம்பால் பாவை பூசிய கண்கள்;
கள்ளிப்பழத்தால் நிறம் கூட்டிய வாய்;
மற்ற காடுகளில் நிற்கும்
முழுக்கைச் சட்டைப் போட்ட
ஆண்…
கடைமடையில் நீர் வழியும் ஏரியைக் காமுறுகிறேன் மூர்க்கமாகப் பாய்கிறேன் அலையில் தளும்பும் ஆம்பல் பறித்து மார்பில் போட்டுக்கொண்டு உடம்பை மல்லாத்தி நீந்துகிறேன் முங்கி ஆழத்துள் சென்று நாணலின் வேரைத் தோண்டுகிறேன் சேற்றில் புதைந்த கிழங்கை நாவால் தீண்டுகிறேன் நீரில் நழுவும் மீனைப்பிடித்து ஆரத்தழுவுகிறேன் அரற்றுகிறேன் கள்வெறி ஊறுகிறது மாமழைக் கொட்டுகிறது.