பாடப்புத்தகத்துக்கு முன்னால்
எப்போதும் சென்று கொண்டிருந்த
என் அம்மா
பணியிட மாறுதல் ஆகி
தூத்துக்குடிக்குப் போனாள்
இயற்கைத் துறைமுகத்துக்கும் செயற்கைத் துறைமுகத்துக்கும்
வித்தியாசம் அப்போதுதான் தெரிந்தது
கப்பல்கள் நின்று செல்வதற்கான அமைப்பு
இயற்கையாகவே அமைந்திருக்கும் இடம்தான்
இயற்கைத் துறைமுகம் என்று
தூத்துக்குடிக்கு நாங்கள் குடியேறிய போதே
சொல்லிவிட்டாள்
ஏற்கெனவே தூத்துக்குடி துறைமுகம்
என்னிடம் ஆழப்பட்ட பிறகுதான்
தூத்துக்குடி துறைமுகத்தை நேராகப் பார்த்தேன்
அம்மா பிறந்து வளர்ந்த ஊர் தூத்துக்குடி
அங்குமிங்கும் பன்றிகள் மேயும் ஊராக
எனக்குத் தெரியப்போகும்அந்த…
அம்மாவின் பொறுமை சகிப்புத்தன்மை எதையும் கொடையாக நான் பெறவில்லை அவளது நுரையீரல் தொடங்கி பலவீனமானதெல்லாம் எதுவோ அதையே அவளின் பிள்ளையாக நான் பெற்றிருக்கிறேன் நினைவு பயின்ற நாள்முதலாய் மருந்துகளுடனயே வாழ்ந்துவருபவள் என்றாலும் இந்த வயதிலும் உளநலத்துக்கான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை அவள் தாதியாகப் பணியாற்றியதால் அலோபதி மாத்திரைகளும் மருந்துகளும் ஊசிகளும் ஆஸ்பத்திரியின் வாசனையும் ஆதியிலேயே என் உடலுக்குப் பரிச்சயம் மழைக்காலங்களிலும் வியர்வை பெருகும் வேனல் நாட்களிலும் மூச்சுவிடத் திணறி என் நுரையீரல் அரற்றும்போதெல்லாம் டெரிபிளினையும் டெக்கட்ரானையும் கலந்து ஊசியாய் ஏற்றுவாள் அப்போது குளிர்மேகங்கள் மார்பில் இறுக்கத்தைத் தளர்த்தி வேர்வையைப் பூக்கவைத்து உறங்கவைக்கும் கூடவே பெயர் சொல்லி சிட்ரிசின் மாத்திரையையும் தருவாள் அம்மா. அவள் தந்த மாத்திரைகளையெல்லாம் விஞ்சி விழுங்கும் மாத்திரைகளுக்கும் அவளுக்கே புரியாத நோய்க்குறிகளுக்கும் அனுபவம் கொண்டுவிட்டது தற்போதைய எனது உடம்பு. ஆனாலும் பொடியனின் உடலைக்…