1. கண்டடைய ஏதுமில்லை தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள் பாடல் மெருகேற மெருகேற கீழ்வானம் சிவக்கிறது வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள். 2. இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு பிரிந்தேன் சுமையை இந்தப் புலர் பொழுதோ சுமையோடே விடிகிறது செல்லும் இடமெங்கும் சுமை தாளவில்லை சற்று இளைப்பாறலாம் எனில் ஏந்திக்கொள்ள யாருமில்லை தனிமையின் பாடலை யார் கேட்பர். …
”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை” சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான் புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர் சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன ‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற அத்தர் மணக்கும் விரலின் வாஞ்சையைப் புறக்கணித்து சீனன் இன்னமும் கத்துகிறான் அல்லாப்பிச்சை மந்திரிப்பார் நாள்பட்ட வலியோடு வருபவர்களின் நெற்றியில் அத்தர் கலந்த கருங்களிம்பை மனதின் மெக்காவிலிருந்து அவர் அள்ளிப் பூசும்பொழுது…
சிங்கப்பூரின் மூத்த மரபுக் கவிஞர்களில் ஒருவர், தீவிர தூயதமிழ்ப் பற்றாளர், 11 நூல்களின் ஆசிரியர், IceCream என்பதற்குப் பனிக்கூழ் என்ற சொல்லை வழங்கியவருமான பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது 80-ஆவது வயதில் சென்ற வியாழன் இரவு 27-மார்ச்-2025 அன்று இயற்கை எய்தினார்கள். அன்னாரது இறுதிச் சடங்கு மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்றது. மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.க / MIC) கட்சியின் தேசியத் துணைத்தலைவரும்,…
1) குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன் அழகழகாய்த் தெறிக்கின்றன சொற்கள் 2) பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன வானம் லேசாகத் தூரலிட்டு அழத் தொடங்கியது ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன் சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள் சந்தோஷங்களுக்கு இப்படி ஓர் ஆசையா 3) அ) புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம் ஒரே…
சலோமியின் மீன் பருவக் கண்கள்
1 யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள் சலோமி. யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும் ‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக் கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி.
இல்லையில்லை யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி.
அவையெல்லாம் கிடையாது, சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில் இருவருக்கு அம்மா.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு நேரிளையத் தங்கையவள். ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி.
இவையெதுவும் உண்மையல்ல கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த…
திணைகள் கவிதை விருதுக்கு நவீன கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன
இந்த முறை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்களுக்கும் சேர்த்து ஒரே விருதாக வழங்கப்படுகிறது. இந்த இணைப்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துவிட்டு நூல்களை அனுப்பவும். https://tinyurl.com/jewrkz3n
நூல்களை 10 மார்ச் 2025 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: Old No.72, New No.3 Kumaran Road II, Main Road, Chinmaya Nagar, Chennai 600 092 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட…
1.
ஒரு நதிக்குள் நிறைய நதிகள் இருக்கின்றன அதில் ஒன்று ஒரு மூலையில் கூழாங்கற்களை ரகசியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறது
ஒன்று கரையை எட்டியெட்டிப் பார்க்கிறது ஒன்று பாறையில் ஏறி வழுக்கி விழுகிறது
சிலதுகள் அமைதி சிலதுகள் சேட்டை
ஒன்றிற்கு நீச்சல் தெரியவில்லை ஒன்றிற்குப் பாடத் தெரிகிறது ஒன்றை ஒன்று முந்துகிறது ஒன்றை ஒன்று பிடித்து இழுக்கிறது
குழந்தைகள் கூட்டமாகச் சென்றாலும் குழப்பமாக இல்லை
கூட்டமாகச் செல்லும் நதிகளைத்தான் நாம் நதி என்கிறோம்
2.
மழை பெய்துகொண்டிருந்த ஊரிலிருந்து மழை…
வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம்
உனக்கும் எனக்குமிடையில் நீளும் இச்சுவர்களில் உப்பின் ஈரம் பூத்திருக்கின்றது உனக்கு எத்தனை முறை சொல்வது.!? உன் மனம் மயில் அகவுவதைப்போல ஒலியெழுப்பிக்கொண்டிருக்கிறது நீயோ குனிந்த தலை நிமிராது கூடை முடைந்து கொண்டிருக்கின்றாய் பூவை தீபத்தில் அழுத்தி ஒளியின் மூச்சை நிறுத்தி வைத்துவிட்டு சிறிது கண்ணடை தூதுக்கு இவ்விடம் பறவையேதுமற்று இருக்கின்றது வௌவால்களின் வழியே அனுப்பியிருக்கிறேன். வழியில் கனியைக் கண்டு அவையும் தலைகீழ் பற்றாற்றலாம் விடியும்முன் வந்தடையும் அந்தப்பாலூட்டிகளின் மார்பில் முட்டி…
சச்சரவு. வெகு தூரம் வந்துவிட்டதாக விசனத்தின் வலியில் துடித்தழுதபொழுது அவன் ஆழ்துயிலில் இருந்தான் கிழவி விழித்திருந்தாள் வீடு அசைந்தாடியது காற்றின் போக்கில். *** பிரவாகம். இறுதி செய்யப்படாத எல்லா பிணக்குகளிலும் அவள் பூ முடைகிறாள். அவன் பூக்கொய்கிறான். குழந்தை சலிப்படைகிறது காத்திருத்தலின் பொருட்டாக. *** தோள் நிற துயரம். ஒவ்வொரு முறையும் சிரேஷ்ட குமாரர்களின் மிருக வதையெனும் மீட்சிக்கு. மனிதனுக்குதான் களிம்பிட வேண்டியதாகிறது வாளிப்பான பசுவிற்கு முன்னால். *** பாத…
சக்கை
வெயிற் பொழுதின் தகிப்பிலொரு காங்கையில் வெக்கையும் வேர்வையும் மூச்சிறைப்புக்குமிடையே பல நாட்களும்....
கடும் மழை கொடுங்குளிர் நரம்பறுக்கும் நாளைய கனவுகளுடன் தள்ளாட்ட நடையிலாங்கு ஒட்டி உலர்ந்த என்பினூடே சுமைபொதியுடன் நகருமவன் கழுதையுமல்ல குதிரையுமல்ல நெய்குடி வண்டியுமல்ல ....
புலர்வேளை தொடங்குமுன்னே ஆறேழு பசித்த வயிறுகளை... வயிற்றுக்கப்பால் அழுத்தும் தவிர்க்கவியலாத் தேவைகளை... நெஞ்சில் புதைத்தேகும் நகரோரத் தெருக்களில் விட்டெறியப்பட்ட…

