றாம் சந்தோஷ் கவிதைகள் குறித்து பெரு விஷ்ணுகுமார். கவிதையின் அனுபவம் காலத்திற்கு அப்பாற்பட்டதென்று கூறிக்கொண்டாலும், கலையாக்கத்தில் ஈடுபடும் தன்னிலைக்கு ஒரு காலப் பிரக்ஞை இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் படைப்புக்குள் சில திட்டவட்டமான முடிவுகளை எடுக்கிறது, தொழில்நுட்பக் கருவிகளை, சொல்லலில் சில உத்திகளைத் திறம்படக் கையாள்கிறது. பிற்பாடு தன் பொலிவு குன்றி வாசகனிடம் கையும்களவுமாக மாட்டிக்கொள்ளவும் செய்கிறது. அது உருவாக்கித்தருகிற ஆளுமையைக் குறிப்பிட்டதொரு வரையறைக்குள் எடுத்துவருவது சிரமமானதே. கவிஞர். றாம் சந்தோஷின் மூன்று தொகுப்புகள் வரையிலான கவிதைகளின்…
சிறுமி வீட்டின் முன் இருக்கும் மரத்தினடியில் அமர்ந்து, நாய்குட்டி, பூனை, எலி, அணில், பன்றி குட்டி, எருமைக் கன்று என இவைகளை முன்னால் அமரச் செய்து, விளையாட தொடங்குகிறாள். சிறுமி ஆசிரியராகவும், மற்றவைகள் மாணவர்களாகவும் மாற்றம் கொள்கின்றனர். ஆனால் இங்கு மாணவர்கள் பாடம் நடத்தவும், ஆசிரியர் சந்தேகம் கேட்பவராகவும் இருந்தார். வேடிக்கைப் பார்த்த பெரியவர்கள் பைத்தியக்காரத்தனமென தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தனர். காலகாலமாக பின்பற்றும் மரபை மீறியதற்காக அந்தச் சிறுமியைக் கடிந்தும் கொள்கிறார்கள். சிலபேர் இது புதிதாக…
இயற்கைப் படிமங்களில் துலங்கும் மீமெய்மையியலும்; பண்பாட்டு வேர்களில் கருக்கொள்ளும் சர்வதேசமும்… பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ கவிதை நூலை முன் வைத்து… - றியாஸ் குரானா
தேர்வு என்பது எப்போதும் சிலவற்றைத் தவிர்ப்பதிலிருந்தே உருவாகிறது. எதை எழுத வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது எல்லாம், குறித்த ஒரு நோக்கத்தின் தற்காலிகமான அவசியத்தின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன ஒன்று. ஆனால், திட்டமிட்டு தவிர்ப்பது என்பதுதான் தணிக்கையாகவும் புறமொதுக்கலாகவும் மாறிவிடுகிறது. தணிக்கை என்ற சொல் அநேகமாக தேர்வு என்பதில் பதிங்கியிருக்கும்…
1. கூவிக்கொண்டும் அகவிக்கொண்டும் உறுமிக்கொண்டும் கீச்சிட்டும் குரைத்தும் இருந்தோம் மொழிக்கு முன்பு மொழி வந்தது நாசமாய்ப் போனது பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறோம் 2 காலை மாலையைப் போல நடிக்கிறது மாலையால் இரவு போல் நடிக்க முடிகிறது இரவு நடிப்பதில்லை அது அதன் இயல்பில் அல்லது இரவின் வேறு வேறு வேஷங்களா பொழுதுகள் அல்லாது இரவின் கனவுகளா பொழுதுகள் கனவு கலைந்து விழிப்பது இரவாய் அல்லாது பகலாகவே அமைவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை 3…
1. கண்டடைய ஏதுமில்லை தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள் பாடல் மெருகேற மெருகேற கீழ்வானம் சிவக்கிறது வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள். 2. இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு பிரிந்தேன் சுமையை இந்தப் புலர் பொழுதோ சுமையோடே விடிகிறது செல்லும் இடமெங்கும் சுமை தாளவில்லை சற்று இளைப்பாறலாம் எனில் ஏந்திக்கொள்ள யாருமில்லை தனிமையின் பாடலை யார் கேட்பர். …
”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை” சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான் புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர் சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன ‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற அத்தர் மணக்கும் விரலின் வாஞ்சையைப் புறக்கணித்து சீனன் இன்னமும் கத்துகிறான் அல்லாப்பிச்சை மந்திரிப்பார் நாள்பட்ட வலியோடு வருபவர்களின் நெற்றியில் அத்தர் கலந்த கருங்களிம்பை மனதின் மெக்காவிலிருந்து அவர் அள்ளிப் பூசும்பொழுது…
சிங்கப்பூரின் மூத்த மரபுக் கவிஞர்களில் ஒருவர், தீவிர தூயதமிழ்ப் பற்றாளர், 11 நூல்களின் ஆசிரியர், IceCream என்பதற்குப் பனிக்கூழ் என்ற சொல்லை வழங்கியவருமான பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது 80-ஆவது வயதில் சென்ற வியாழன் இரவு 27-மார்ச்-2025 அன்று இயற்கை எய்தினார்கள். அன்னாரது இறுதிச் சடங்கு மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்றது. மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.க / MIC) கட்சியின் தேசியத் துணைத்தலைவரும்,…
1) குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன் அழகழகாய்த் தெறிக்கின்றன சொற்கள் 2) பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன வானம் லேசாகத் தூரலிட்டு அழத் தொடங்கியது ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன் சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள் சந்தோஷங்களுக்கு இப்படி ஓர் ஆசையா 3) அ) புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம் ஒரே…
சலோமியின் மீன் பருவக் கண்கள்
1 யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள் சலோமி. யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும் ‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக் கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி.
இல்லையில்லை யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி.
அவையெல்லாம் கிடையாது, சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில் இருவருக்கு அம்மா.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு நேரிளையத் தங்கையவள். ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி.
இவையெதுவும் உண்மையல்ல கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த…
திணைகள் கவிதை விருதுக்கு நவீன கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன
இந்த முறை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்களுக்கும் சேர்த்து ஒரே விருதாக வழங்கப்படுகிறது. இந்த இணைப்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துவிட்டு நூல்களை அனுப்பவும். https://tinyurl.com/jewrkz3n
நூல்களை 10 மார்ச் 2025 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: Old No.72, New No.3 Kumaran Road II, Main Road, Chinmaya Nagar, Chennai 600 092 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட…