விரைவில் வெளியாகவிருக்கும் ‘தலையில் பிறைசூடிய பெண்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்) 1 வார்த்தைகளை மலர்த்தண்டுகளாய் வழவழப்பாக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச் சாகசம் கைவரும் - ஒரு கொத்து வார்த்தைகளை அடியில் சிவப்பு நிற ரிப்பன் கட்டியும் நீர்க்கோலங்களாய் ஒரு தாளைச் சுற்றியும் நீட்டுவது, என்னவோ சுலபம்தான். மலர்த்தண்டுகளை மேலிருந்து கீழாய் குறுக்க வெட்டியதால் ஏற்பட்ட தழும்பின் சொரசொரப்பு இன்னமும் கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பதால் கேட்கிறேன்: தவறாகப் போனது வெட்கத்தில் தலைகுனிய ஆரம்பித்திருக்கும் தண்டா, ஒரு துண்டுச் சதைபோன்ற…
Harlem-இல் லோர்கா ஒரு கறுப்பனின் மரணத்திற்கு ஃப்ளெமெங்கோ பாணி பாடல்.. இந்த நகரம் என்னும் கைத்துப்பாக்கி உன்னையும் என்னையும் நிரந்தரமாய்க் குறிபார்த்தபடி இருக்கிறது. நல்லதொரு கைத்துப்பாக்கி அமைவதைப் போலவே கைக்கு வாகாய் ஒரு நகரமும் எல்லோருக்கும் அமைவது அவசியம், ஒரு நாத்திகனுக்கு எதிர்ப்பதற்கு வாகாய் ஒரு கடவுள் அமைவதுபோல் - என்னைக் கொலை …