இலங்கைப் பெண்களின் கவிதைகள் என்றால் அதில் தனியே தமிழ்க் கவிதைகளை மட்டும் கொள்ள முடியாது. சிங்களக் கவிதைளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் எடுத்துப் பேசும்போதுதான் இலங்கைப் பெண்களின் கவிதைகளைப் பற்றிய சித்திரம் கிடைக்கும். இரண்டு மொழிச் சூழல்களிலும் உள்ள சமூக, அரசியல், பண்பாட்டு நிலைமைகள் புலப்படும். இரண்டிலும் நிறைய வேறுபாட்டம்சங்கள் உண்டு. ஏன் தமிழில் கூட நிறைய வேறுபடுதல்கள் உள்ளன. முஸ்லிம் பெண்களின் கவிதைகள் வேறொன்றாகத் தனித்து நிற்கும். அதைப்போல மலையகப் பெண் கவிதைகள் இன்னொரு…
யாரும் சொல்லாத ஒன்றை யாரும் எண்ணாத ஒன்றை யாரிடத்திலும் இல்லாத ஒன்றை யாராலும் தந்து விட முடியாத ஒன்றை யாருக்குமே வாய்க்காத ஒன்றை யாராலும் யாராருக்குமே அளிக்கப்படாத ஒன்றை ஒரு போதுமே நிகழாத ஒன்றை ஒரு போதுமே நிகழ முடியாத, நிகழ்த்தவியலாத ஒன்றை அவனுடைய நிழலில் கண்டேன் அந்த நிழல் அவனை விட்டுப் பெயர்ந்து எங்கெல்லாமோ சென்றது. --------------------------------------------- யாரென்றே தெரியாத ஒருவன் தான் யாரென்றே புரியாதவன் ஏது இதுவென்று அறியாதவன் ஒளிரும் நிழலாகி நின்றான் ஒளிரும்…