Skip to content Skip to footer

கட்டுரைகள்

கட்டுரைகள்

கடல் நாகங்கள் பொன்னி பற்றி எம்.சேகர்

கவிதை மனம் சார்ந்தது. அது கண நேர உணர்வுகளின் வலிகளின் வடிகாலாக வெளிப்படுவது. இவையே இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் எங்கும் நிறைந்திருக்கின்றன. சிங்கப்பூர்க் கவிதை என்பது இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இந்த ஆண்டு இலக்கியப் பரிசுக்குத்…

யவனிகாவின் கிடக்கட்டும் கழுதை

ஒரு பகல், ஒரு இரவு அல்ல. நித்தியம் காத்திருக்கிறது யவனிகா யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி, எழுதி வருபவன் என்ற வகையில், அவனது கவிதைகள் பற்றி சிந்திக்க எண்ணும்போதெல்லாம் இதன் மரபு என்ன? இதன் வார்படம் என்ன…

சிங்கப்பூர்க் கவிதை விழாவில் சீன ஓவியங்களுக்கான கவிதைகள்.

சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழிக் கவிதைகளைக் கவிதை ஆர்வலர்களுக்கிடையே அறிமுகம் செய்து சிங்கப்பூர்க் கவிதைகளை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டு சிங்கப்பூர்க் கவிதை விழா கவிதைசார் நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பத்தாவது ஆண்டு நிறைவைக்…

கற்கை – அகச்சேரன்

பெயரிலேயே இல்லை எல்லாம். ஆமாம். பெயரில்தான் என்ன இருக்கிறது? ஆமாம். எல்லாப் பெயர்களும் காலிக்குறிப்பான்களும் அல்ல. சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயரைக் கொண்டவனின் மேதமையை ‘புதுமைப்பித்தன்’ என்று அவனே புனைந்துகொண்ட துடுக்குத்தனமும் தேய்ந்த உணர்வும் கொண்ட பெயர் தாங்கி அர்த்தம் கொண்டுவிட்டது.…

தூரத்துப் பச்சை – கடல் நாகங்கள் பொன்னி

வாசகனின் வாழ்வனுபவமே உலகில் எழுதப்படும் பெரும்பாலான கவிதைகளும் கதைகளும் அவனுக்கான அணுக்கத்தைத் தந்துவிடுகின்றன. அவனுக்கான ஏக்க நினைவுகளைக் கிளர்த்திவிடுகின்றன. எப்போதோ நடந்து மறக்கப்பட்டவற்றை மீட்டெடுத்துத் தரும் சில நொடிகள் அல்லாடவைக்கின்றன. அவை பல சமயம் கண்ணீரையும் வரவழைத்துவிடுகின்றன. காதல் மொட்டுக்களை மீண்டும்…

காலம் தோறும் வாழும் கவிதைகள்

கடல் நாகங்கள் பொன்னி நூலுக்கு கவிஞர் கலாப்ரியா வழங்கிய அணிந்துரை. ``சிங்களத்தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார் எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்..” இந்த வரிகளை உள்ளடக்கிய கண்ணதாசனின் பிரபலமான திரைப்படப்…

நூடுல்ஸால் நிரம்பிக்கிடக்கும் பொன்னியின் வாழ்வு

 கடல் நாகங்கள் பொன்னி என்ற தலைப்பிட்டு இன்பா தனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.  பொதுவாக கதைகள் அதன் காட்சி நகர்விலும் கதாப்பாத்திரங்களின் அடையாளங்களிலும் வாசகர்களை ஈர்த்துக்கொள்ளும். கவிதையில் பார்த்தோமேயானால் அதில் வரும் அழகிய வருணனைகள், கற்பனைகள், உபயோகிக்கும் சொற்கள், ஒரு புதிய பொருளைக்…

ந. ஜயபாஸ்கரன் உத்தேசித்திருக்கும் ‘அன்னப்பாடல்’

‘இல்லாத இன்னொரு பயணம்’ என்று தனது கவிதைத் தொகுப்புக்குப் பெயரிட்டு ந. ஜயபாஸ்கரன் தனது ‘அன்னப் பாடல்’( SWAN SONG)-ஐ எழுதியுள்ளார்.                            …

கவிதையின் வழிகள்

கவிஞனுக்கு என்ன வேண்டும்? ஒருமுறை கோவை ஞானியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் ஏன் கலை, இலக்கியங்கள் எழுதுகிறோம்? கவிதை என்பது ஓர் ஆடம்பரம் இல்லையா? மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது என்பது போல இலக்கியம் இல்லாமல் வாழ முடியும் என்பதும் எதார்த்தம் என்றால்…

வெளிச்ச தேவதை – உலகமயமாதலின் முதல் பலி

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எனக்கு நேரடியாக அறிமுகமாகும் முன்னர் அவரைப் புனைவு வழியேதான் கண்டடைந்தேன். நேரடியாகப் பார்த்து நட்பு பாராட்டுவதற்கான அடிநாதமாய் இருப்பது ஒருவரின் படைப்புதானே. ஒருவரின் படைப்புகள்தானே அவரை அணுகவைக்கிறது. ஆனால் அவரின் நட்பைவிட அழுத்தமாய்த் தன்னை முன்னிறுத்திக்கொள்வது படைப்பு…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]