Skip to content Skip to footer

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

போர்கெஸின் கவிதைகள்

1. தெகார்தே (Descartes) நானே இப்பூமியின் ஒரே மனிதன், ஆனால் ஒருவேளை இங்கு பூமியோ மனிதனோ இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை ஒரு கடவுள் என்னை ஏமாற்றக்கூடும். ஒருவேளை ஒரு கடவுள் எனக்கு தண்டனை அளித்திருக்கக்கூடும் காலம் எனும் இந்த தீரா மாயைக்கு.…

மேரி ஆலிவர் – மொழிபெயர்ப்புக் கவிதைகள்

1.மரங்களைப் பற்றிய கனவு என்னுள் உள்ள ஒன்று மரங்களைப் பற்றிக் கனவு காண்கிறது. அமைதியான வீடு, கொஞ்சம் பசுமை, ஓரளவு இடம் தொல்லைப்படுத்தும் நகரத்தின் சலம்பல்களிலிருந்து கொஞ்சம் தள்ளி.. தொழிற்சாலைகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் சற்றே விலகி.. எனது வாழ்விலிருந்து சில கட்டற்ற…

நகுலன் ஆங்கிலக் கவிதைகள்

நகுலன் அவர் வாழ்நாள் காலத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் இவை. நகுலன் நூற்றாண்டையொட்டி ஷங்கர்ராமசுப்ரமணியன் தொகுத்து வெளிவந்திருக்கும் அருவம் உருவம் நகுலன் 100 புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. நகுலனின் ஆங்கிலக் கவிதைகள் பெருந்தொகையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள தருணத்தை…

அருண் குமார் சாஹூ கவிதை

சாலை சேற்றுச் சாலைகள், தார்ச் சாலைகள், கிராமச் சாலைகள், நகரச் சாலைகள், நெல்வயல்களின் குறுக்கே சாலைகள், விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சாலைகள், சந்துகள், தெருக்கள், நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், சில நேராக, சில பாம்புபோல; சில வெறிச்சோடி, சில நெரிசலாக; இருளுக்குப்…

நான்யா சுதிர் கவிதை

நான் எப்படித் துவங்குவது? நான் உனக்கு என்ன சொல்வது ஒரு கடலோரத்திலிருந்து மற்றொன்றுக்கு எதுவும் இல்லாமல் யாரும் இல்லாமல் என் எண்ணங்கள் மட்டுமே இருந்த இந்த நீண்ட பயணங்கள் பற்றி. நான் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் நான் உன்னிலிருந்து,…

மேகி ஸ்மித் கவிதை

நல்ல தூண்கள் - மேகி ஸ்மித் வாழ்க்கை குறுகியது, ஆனாலும் நான் இதை என் குழந்தைகளிடம் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறேன். வாழ்க்கை குறுகியது, நான் என்னுடையதை ஆயிரக்கணக்கான சுவையான, தப்பான ஆலோசனைகளின் வழிகளில் குறுக்கிவிட்டேன். ஆயிரக்கணக்கான சுவையான,…

லல்லா கவிதைகள்

லல்லா கவிதைகள்   (1) தென்புல மேகங்களை கலைந்தோடச் செய்வேன். கடலை வற்ற வைக்கவும் கைவிடப்பட்ட நோயாளியைக் குணப்படுத்தவும் கூட என்னால் ஆகும். ஆனால், ஒரு முட்டாளின் எண்ணப்போக்கை மாற்றுவதென்பதோ என் சக்திக்கும் அப்பாற்பட்டது. (2) விளையாட்டாக என்னிடமிருந்து நீ ஒளிந்துகொள்கிறாய்! நாள் முழுவதும் நான் தேடுகிறேன் பிறகு, நானேதான் நீயென்பதை அறிகிறேன். அந்தக் கொண்டாட்டம் இப்போது ஆரம்பித்துவிட்டது. (3) பொதுச்சாலை வழியேதான் வந்தேன் ஆயினும் அதன் ஊடாகத் திரும்பிப் போகவியலாது பயணத்தின் நடுவே பாதிவழியில் நிற்கிறேன். பகல் முடிந்து இரவு தொடங்குகிறது. எனது…

He Shan சீனக் கவிதைகள்

அவனது வாகனத்தை தேர்ந்தெடுக்கிறோம் முன்னரே வந்த எதிரொலியின் சாயலில் இடர்பாட்டின் வண்டியில் சுற்றிச் சுற்றி வீசப்படுகிறோம் காட்டுப் பூக்கள் கீதமிசைக்கும்போது நாங்கள் அந்தக் கீதங்கள் வழியாக நடக்கிறோம் சூரியன் நீண்ட நிழல்களைப் படர்த்தும்போது ஓடையில் இருந்து பருகும் கனவுகளை கனவுகாண்கிறோம் இலையுதிர்காலத்தில்…

இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது

யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது, ஆனால் மத்தியானத்திற்குள் வெப்பம் கூடிவிட்டது. நீல முகில்கள் வடக்கில் குவிந்திருந்தன. நான் செவ்வியல் மொழிகளைக் கற்பிப்பது குறித்து விவாதம் நிகழ்ந்த ஒரு சந்திப்பிலிருந்து வந்தேன். தனது பிரச்சனைகளை என்னிடம்…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]