1. தெகார்தே (Descartes) நானே இப்பூமியின் ஒரே மனிதன், ஆனால் ஒருவேளை இங்கு பூமியோ மனிதனோ இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை ஒரு கடவுள் என்னை ஏமாற்றக்கூடும். ஒருவேளை ஒரு கடவுள் எனக்கு தண்டனை அளித்திருக்கக்கூடும் காலம் எனும் இந்த தீரா மாயைக்கு. நான் கனவு கண்டேன் நிலவை. நான் கனவு கண்டேன் என் கண்கள் நிலாவைக் காண்பதை. நான் கனவு கண்டேன் முதல் நாளின் காலையையும் மாலையையும். நான் கனவு கண்டேன் கார்தேஜ் நகரத்தை மற்றும் அந்நகருக்காக…
கவிஞனுக்கு என்ன வேண்டும்? ஒருமுறை கோவை ஞானியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் ஏன் கலை, இலக்கியங்கள் எழுதுகிறோம்? கவிதை என்பது ஓர் ஆடம்பரம் இல்லையா? மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது என்பது போல இலக்கியம் இல்லாமல் வாழ முடியும் என்பதும் எதார்த்தம் என்றால் எதற்காக நாம் இலக்கியத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டேன். கோவை ஞானி அதற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார். அதைச் சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது. மனிதனைப் போலவே எந்த உயிர்களாலும்…
சரஸ்வதி நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உரசுகின்றன ஒரு நதி மின்னலென நெளிகிறது உன் நாதம் ஒரு கவிதையாகிறது. # பெரும் கலவரம் நடந்த குளம் ரத்த சிவப்பு கரையில் இருக்கிறது வீணை கரையில் இருக்கிறது கரை கரையில் இருக்கிறது குளம் எங்கே போனது மரம் எங்கே போனது யானை எங்கே போனது செருப்புகள் மிதந்துகொண்டிருக்கின்றன கட்டைகள் துணிகள் மிதக்கின்றன ஆழத்தில் கிடக்கிறது ரத்தக்கறை நீங்காத அரிவாள் அதனை நீர் மீட்டுகிறது வெள்ளைத்தாமரை செஞ்சிவப்பு ஆகிறது #…
விடம்பனக் களிறு மூங்கிற் புல்லை பாங்குற தறித்து வாங்கிய பரணில் தினைபுனம் காக்கும் சேனோன் வானுற விளைந்த காட்டுயானமும் கருவுப்பரிசியும் சிதையக் குலைக்கும் களிறுகளை சிதைத்த கதை இது இதை நான் உங்களுக்குச் சொல்வேன் என்றான் சூதன் (வேறு) பெரும் பசிகொண்ட மதயானை ஒன்று ஆரண்யத்தில் நுழைந்தது தன் வசந்தத்தில் தழைத்திராத முதிரா வனம் தத்தளித்தது அவன் கபிலன் மண்ணின் வண்ணத்தையும் மண்ணுண்டு திரண்ட மரத்தின் இளந்தளிர் வண்ணத்தையும் மேனியில் கொண்டவன் நிழலாய்…
கவிஞர் விக்ரமாதித்யன் ஒருமுறை ’மாயத்தைக் கட்டுவதே கவிதை’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். எனக்கு அந்தச் சொற்கள் மனதுக்குள் உருண்டுகொண்டேயிருக்கின்றன. அதன் உள்ளார்ந்த பொருள் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். விக்ரமாதித்யன் சொன்ன சூழலலமைவைக் கடந்தும் அந்தச் சொற்கள் ஒரு தத்துவார்த்த தளத்துக்குள் பயணிக்கின்றன எனக் கருதுகிறேன். கவிதைகளில் மாயம் எப்படிக் கட்டப்படுகிறது. மாயம் என்பதைப் புரியாமை, பூடகத்தன்மை, சூட்சுமப் பொருள் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ஒரு கவிதையில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு, தனித் தனிச் சொல் சொல்லாய்…
தொஷ்டா! நீ அழைத்தால் என்னால் வராமல் இருக்க முடியாது என் கண்களைக் குருடாக்கிக்கொள்கிறேன் காதுகளை பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் செவிடாக்கிக்கொள்கிறேன் என் இதயத்தைப் பிய்த்து நாய்களுக்கு வீசுகிறேன் அப்போதும் உன் குரல் எனக்குக் கேட்கிறது உன் உருவம் எனை அழைக்கிறது உன் காதல் எனைத் தொடுகிறது மலைகளில் திரளும் வெள்ளம் பள்ளத்தாக்குகளில் பாய்வது போல் விண்ணுக்கு எரியப்பட்ட கல் பூமிக்கு இழுக்கப்படுவது போல் நான் உன்னால் அழைக்கப்படுகிறேன் கதியற்று வருகிறேன் மீண்டும் மீண்டும்
பொது யுகம் 2536 அந்த மூத்த எழுத்தாளர் நேர்காணலில் அமர்ந்திருக்கிறார் கடந்த காலத்திலிருந்து யாரையாவது திரும்ப அழைக்க நேர்ந்தால் யாரை அழைப்பீர்கள் அவர் சற்றும் யோசிக்காமல் சொல்கிறார் 1996ல் இறந்து போன என் மனைவி ஒரு கணம் நிசப்தம் மறுகணம் அவர் மனைவி தோன்றுகிறார் இது எப்படி சாத்தியம் அன்பே எழுத்தாளர் தழுதழுக்கிறார் உன்னால்தான் அன்பே இருவரும் தழுவுகிறார்கள் கொட்டும் மழையில் வானில் நீந்திச் செல்கின்றன இரு தங்கமீன்கள் ஒன்றை ஒன்று…
யானையைக் குழி தோண்டி பிடிப்பது போல் கவிஞனைக் காதல் பிடிக்கிறது பரவசத்தின் சொற்கள் விம்முகின்றன அவனின் ஒளிகொண்ட சொற்களை வானில் எறிகிறது அவை விண்மீன்களாகின்றன இருண்ட சொற்களை பகல் காகங்களாக்குகிறது காதலின் அபோதத்தில் கவிஞன் பித்தாகிறான் அவன் அழுதபோது ஒரு யுகத்தின் புன்னகை கோணுகிறது அவன் சிரித்த போது யாருமற்ற வனங்களில் பூக்கள் கண்ணெடுக்கின்றன யாருமில்லை என சுருள்கிறான் நடுங்குகிறது வானம் அவனின் யானைப் பசியால்தான் தமக்குள் மோகிக்கின்றன உயிர்கள் நுரைத்து நொதிக்கும்…
அவனை நான் மூன்று முறை பார்த்திருக்கிறேன் உலகத் திரைப்பட விழாவில் உன் அலுவலகத்தில் உன் படுக்கையில் என் கற்பனையில் அன்பே அது கற்பனை என்றே நம்ப விரும்பினேன். ஒரு நோயை நம்ப விரும்பாத அதைரியக்காரன் போல, இதுவெல்லாம் வெறும் கனவென்று எழ விரும்புபவன் போல ஹார்ட்டின்களில் என்ன இருக்கின்றன; முத்த ஸ்மைலிகளில் என்ன இருக்கின்றன என்று நினைத்தேன். அது அவ்வளவு சோபையான நம்பிக்கை இல்லை என்றாலும், அதுவே போதுமாய் இருந்தது. நீ அதை…
நேரசைக்கு 64 எழுத்துகள் நிரையசைக்கு 68 எழுத்துகள் அதுவே கட்டளைக் கலித்துறை என்கிறாள் காரைக்கால் அம்மை நானோ நிகோனர் பர்ராவின் ரோலர் கோஸ்டர்களை கவிதைக்குள் ஓட்ட முயல்பவன் தலை கீழாய் நடந்து உன் பதம் அடைவது என் இயல்பல்ல சிவையே