Skip to content Skip to footer

மௌனன் யாத்ரிகா

கற்பித்தல்

அவள் ஒரு கொடுமைக்கார தாய் பழம் பறித்து மடியில் வைத்துக்கொண்டு ஊட்டிவிடாமல் காட்டுக்குள் ஓடுடா என்று முதுகில் அடித்து விரட்டுவாள் தூக்கி மரக்கிளையில் ஏற்றிவிட்டு காவலுக்கு நிற்காமல் போய்விடுவாள் புதர்களில் பிடித்துத் தள்ளிவிடுவாள் முழு நீரோட்டமிருக்கும்போது ஆற்றுக்கு மறுபக்கமிருக்கும் மருந்துச் செடியைப் பறிக்க அனுப்புவாள் அவளொரு கண்டிப்பான முதல் ஆசிரியர்.

மேலும் வாசிக்க

ஊரில் மீதமிருக்கும் அலர்

குப்பையில் பூத்த சாமந்தியின் மேல் கொல்லையில் வளர்ந்த வாழை நாருக்கு மனம் கொள்ளா காமம் மலர்ச்சரம் ஆகலாமா என்றான். அவளுக்கும் மையல்தான் இருந்தாலும் அச்சம் புஞ்சைக்கு உரமாக்கிவிடுவார்கள் என்றாள். உள்ளூற பயம் ஊறினாலும் நெஞ்சிரண்டிலும் கள்ளூறியது. இரவுக்குறியில் சந்திப்பு, இதழ் தொட்டுப் பயின்ற காதல் சரம் தொடுத்து ஆடியது. நெருப்பே வைக்காமல் எள்ளுக்கட்டு புகையும் என்பதை அவள் அறிவாள். ஆயினும் அவர்கள் அறுவடையை நிறுத்தவில்லை. எள்ளுப்போர் உயர்ந்த நாளொன்றில் தன் சங்குக் கழுத்துக்கு கத்தித் தீட்டப்படுகிறதென்று சொன்னாள். குப்பைக்குத் தீ வைத்த பிறகும் சாமந்தி மலர்ந்தாடியது வாழையில் கத்தி வைத்தாலும் நாருக்கு காமம் தீரவில்லை கண் காணா இடத்துக்கு ஊரைவிட்டு ஓடிப்போனார்கள். எங்கிருந்து பாம்பு வரும் எப்பொழுது தேளு வரும் என்று செத்துப் பிழைத்து கற்பில் நுழைந்தார்கள் ஓடுகிறது பிழைப்பு . ஆனால், ஊரில் அவர்கள் விட்டு…

மேலும் வாசிக்க

இரண்டு-காடைகள்

மக்காச்சோளம் ஒடிப்பதை நிறுத்திவிட்டு காடைகள் ஓடி மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள், பால் கள்ளிக்குள் பதுங்கியவை வெளியேறவில்லை. சோளத் தோகைகள் உடம்பை உரசும் ஒலி குறைத்து மெதுவாய் ஒரு காட்டுப்பூனையைப்போல் காடைகள் பதுங்கிய வேலியை நெருங்கினாள். "புகுபுகு புகுபுகு" என்றொரு குரல். கருஞ்சிவப்பு உதடுகளைக் குவித்து பறவைகள் அஞ்சிடாத விசில் கொடுத்து அவனை அழைத்தாள். ஒரு கைத்தடியைத் தூக்கிக்கொண்டு மெல்ல இன்னொரு பூனையைப்போல் சோளத்தட்டைக்குள் நகர்ந்தான் அவனுடைய உருமா கட்டையும் பதுங்கி வந்த தோரணையையும் கண்டவள் தன் எள்ளுப்பூ மூக்கைச் சுருக்கி சிணுங்கலாய் ஒரு கவிச்சை வார்த்தையைச் சொன்னாள். காது வழியே ஒரு கேலி மொழி போவதுபோல் உணர்ந்தவன் தலை தூக்கிக் கண்ணடித்தான். வாய்க்கு வெளியே சொல் வராதவாறு "கட்டை எதற்கு" என்றாள். அவனும் அதுபோலவே "காடை அடிக்கத்தான்"என்றான். கண்களை ஆந்தையைப்போல் சுழட்டியவள் "மொவறக்கட்டை" என்றுவிட்டு அதைப் போட்டுவிட்டு அருகே வாவென்று அழைத்தாள். "சிறுக்கி…

மேலும் வாசிக்க

காமம் விளைந்த சோளக்காடு

சோளக்காடுகளுக்கு குருவிகள் வரத் தொடங்கிவிட்டன. விளைச்சலில் நமது பங்கை எடுக்க வேண்டுமென்று ஊரே பொம்மைகள் செய்யத் தொடங்கியது எல்லாம் ஆண் பொம்மைகள் கண்கள் பெரிதாக, முறுக்கிய மீசையுடன் தொப்பிப் போட்ட பொம்மைகள். காலங்காலமாக கதிர்களுக்கு நடுவே ஆண் பொம்மைகள் நிற்பதைப் பார்த்துப் பழகிய குருவிகள் அஞ்சி அஞ்சி தானியங்களைத் தீண்டுவதையும் வானில் வட்டமிட்டமிடுவதையும் நான் விரும்பவில்லை. நான் மட்டும் பெண் பொம்மை செய்தேன். சாயம் போகாத சிவப்புச் சேலை ; நீலப்பூ பூத்த வெள்ளை ரவிக்கை ; தொடைவரை சவுரி முடி ! கொத்தாக வைத்த ஆவாரம்பூ; பாலாடையில் கோலியை வைத்து சுண்ணாம்பால் பாவை பூசிய கண்கள்; கள்ளிப்பழத்தால் நிறம் கூட்டிய வாய்; மற்ற காடுகளில் நிற்கும் முழுக்கைச் சட்டைப் போட்ட ஆண்…

மேலும் வாசிக்க

பித்துநிலையின் முதல் செய்யுள்

கடைமடையில் நீர் வழியும் ஏரியைக் காமுறுகிறேன் மூர்க்கமாகப் பாய்கிறேன் அலையில் தளும்பும் ஆம்பல் பறித்து மார்பில் போட்டுக்கொண்டு உடம்பை மல்லாத்தி நீந்துகிறேன் முங்கி ஆழத்துள் சென்று நாணலின் வேரைத் தோண்டுகிறேன் சேற்றில் புதைந்த கிழங்கை நாவால் தீண்டுகிறேன் நீரில் நழுவும் மீனைப்பிடித்து ஆரத்தழுவுகிறேன் அரற்றுகிறேன் கள்வெறி ஊறுகிறது மாமழைக் கொட்டுகிறது.

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]