கடல் நாகங்கள் பொன்னி என்ற தலைப்பிட்டு இன்பா தனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக கதைகள் அதன் காட்சி நகர்விலும் கதாப்பாத்திரங்களின் அடையாளங்களிலும் வாசகர்களை ஈர்த்துக்கொள்ளும். கவிதையில் பார்த்தோமேயானால் அதில் வரும் அழகிய வருணனைகள், கற்பனைகள், உபயோகிக்கும் சொற்கள், ஒரு புதிய பொருளைக் கண்டடைவது, புதுமையான படிமங்கள, குறியீடுகள் என்று பலவற்றைத் தேவையான அளவு மட்டுமே எடுத்து ஒரு கவிதையைக் கட்டமைக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்துக்கொள்ளும்.கடல் நாகங்கள் பொன்னி எனும் இன்பாவின் கவிதைத்…
கரையொதுங்கும் கதை சாங்கிக் கடற்கரைக்குச் செல்கையில் தன்னந்தனியாகக் கரையொதுங்கும் கிளிஞ்சல்களைப் பார்த்திருக்கிறீர்களா? அது பேசிக் கேட்டிருக்கிறீர்களா? கடலுக்குள் இருப்பவைகளிடம் சாத்தியமில்லையெனினும் வானம் பார்த்துக் கிடப்பவைகளிடம் கொஞ்ச நேரம் மட்டும் உங்கள் காதைக் கொடுங்களேன். புணரும் நத்தைகளைப் பிரித்து வேறொரு மாகாணத்தில் வீசுவதைப் போல கொடூர அலையொன்று கடலிடமிருந்து அதை வீசியெறிந்த கதையைச் சொல்லும். அதன் பாசத்தையெல்லாம் சூரியன் மென்று தின்று முடிப்பதற்குள் உங்கள் கண்ணில்…