அகாலம் செத்தவன் கால்களை மடக்க மீண்டும் உயிர்த்தது போல அந்த கரப்பான் பூச்சி மல்லாந்தபடிக் கணுக்கால்களை அசைக்கிறது ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் எங்கிருந்தோ முகம் காட்டிவிடுகிறது கழிவறை பீங்கான் வழவழப்பில் ஒலியேயின்றி நடக்கிறது சில நேரங்களில் நடப்பதும் சில நேரங்களில் ஓடுவதும் சிலநேரங்களில் மல்லாந்து படுத்துச் சிரிப்பதுமே வழக்கமாகிவிட்ட வேளையில் பறப்பதற்குச் சிறகிருந்தும் பறக்காமல் இங்கேயே சுற்றிச் சுற்றி அப்படி என்னதான் கண்டுவிட்டதோ இந்தக் கழிவறையில்? நானல்லாத நேரங்களில் என்னதான் செய்யுமோ துணையற்ற அது…
தாமரை பாரதி
1 article published