யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது, ஆனால் மத்தியானத்திற்குள் வெப்பம் கூடிவிட்டது. நீல முகில்கள் வடக்கில் குவிந்திருந்தன. நான் செவ்வியல் மொழிகளைக் கற்பிப்பது குறித்து விவாதம் நிகழ்ந்த ஒரு சந்திப்பிலிருந்து வந்தேன். தனது பிரச்சனைகளை என்னிடம் சொல்ல விரும்பிய நண்பருடன் நான் ஆற்றின் அருகே அமர்ந்திருந்தேன். தண்ணீர் நிறைய ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு சிறுவர்கள் கரையிலிருந்து கூழாங்கற்களை ஆற்றில் வீசிக்கொண்டிருந்தனர். அவருக்குப் பகிர்வதற்கு என்னிடம் எந்த ஆலோசனையும் இல்லை... மேலும் நதிக்கரையில் பெஞ்சுகளும்…
யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா வெள்ளைக் காகிதம் மற்றும் காலம்: ஒன்றை நான் நிரப்புகிறேன், இன்னொன்று தன்னைத்தானே நிரப்பிக்கொள்கிறது. இரண்டுக்கும் அவ்வளவு ஒற்றுமையுண்டு. அவையிரண்டின் முன்பும் நான் கூச்சப்படுகிறேன், திகைத்துப் போகிறேன். உயர்ந்த வாசலுடைய இருண்ட கொட்டகையினுள்ளிருக்கும் ஆட்டினைப் போன்றது கவிதை. அதை நெருங்கும்போதெல்லாம் நிலைகுலைந்து போகிறேன். பார்வை வெளியே இருக்கிறது. இங்கே உன் கைகளின் உதவியினால் மட்டுமே நகர இயலும். வெள்ளைக் காகிதம். வெள்ளைக் கம்பளி. இருட்டில் இரண்டும் அவ்வளவு எளிதில் மறைந்துவிடுவதில்லை. காலம்…
யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா நிறையப் பூச்சிகள் இந்தக் கோடையில். நீங்கள் தோட்டத்திற்குள் சென்றவுடன் உங்களை முற்றுகையிடுகின்றன ரீங்கரிக்கும் வண்டுகளின் திரளொன்று. பறவைகளுக்காக நீங்கள் அமைத்த பெட்டிகளில் குண்டுத்தேனீக்கள் கூடு கட்டுகின்றன, காட்டுச்செடிகளின் புதர்களில் தங்களது கூடுகளை அமைக்கின்றன குளவிகள். மேலும் மாடி அறையில் மேசையின் முன் அமர்கையில் நீங்கள் அடிக்கடி கேட்கிறீர்கள் ஒரு ரீங்காரத்தை, மேலும் உங்களுக்குத் தெரியாது அந்தச் சப்தம் குண்டுத்தேனீக்களுடையதா, குளவிகளினுடையதா, மின்சாரக் கம்பிகளினுடையதா, வானத்தில் செல்லும் விமானத்தினுடையதா, சாலையில் போகும்…
யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா நானும் என் மகனும் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஏற்கனவே மாலை மருண்டுவிட்டிருந்தது. மேற்கு வானில் ஓர் இளைய நிலா அதன் அருகில் ஒரு நட்சத்திரம். நான் என் மகனுக்கு அவற்றைக் காண்பித்து நிலவை எப்படி வரவேற்பது என்றும் அந்த நட்சத்திரத்தை நிலவின் வேலையாள் என்றும் விவரித்துச்சொன்னேன். வீட்டை நெருங்குகையில் அவன் சொன்னான் நாம் சென்று வந்த இடத்தின் தொலைவைப் போலவே நிலாவும் ரொம்பத் தூரத்தில் இருக்கிறது என்று. நான் அவனிடம் நிலவு…