Bynge Appஇல் ராஜேஷ் குமாரை பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள் என்றார் ஒரு நண்பர் ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள் என்றேன் நான் ஒரு வேண்டாத திகைப்பின் வாயை மூடுவதற்கு அடுத்த கண்டத்திலிருந்து கையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது
நேற்றுத்தான் ஒன்று வந்தது போலிருந்தது அதற்குள் முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது ஒரு திரிபுருவுக்கும் இன்னொன்றுக்குமிடையே காலம் குறையக் குறைய எனக்கும் உனக்குமிடையே தூரம் அதிகமாகி மேலதிகமாகிறது இப்போதெல்லாம் உன் முகபாவனைகள் மாறிவிடவில்லையே பேசும்போது இப்போதும் உன் வலது புருவத்தை உயர்த்துகிறாயா உன் விரலசைவில் இப்போதும் சிறு குருவிகள் உன் நாற்காலியின் கைப்பிடியில் வந்தமர்கின்றனவா நான் ஒப்பனை செய்துகொண்டு பல மாலைகளாகிவிட்டன களைப்புற்றிருக்கிறேன் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவுக்குக் கூட இப்போதெல்லாம் ஊர்ந்து செல்கிறேன்…
குடும்பத்திலிருந்த குஞ்சுப் புறா— சின்னஞ் சிறிய ரத்தச் சிவப்பு வாய் அதற்கு— என்னைப் பிடிக்காத என்னை நினைவுபடுத்தியது அது தன் அம்மாவைச் சுற்றிச் சுற்றி நடந்தது தன் அம்மாவின் குண்டு உடம்பின்மீது ஒட்டிக்கொண்டு தூங்கியது தன் அம்மாவின் வாயிலிருந்து ஹூம் ஹூம் சத்தத்துக்கு தானும் பதில் சத்தம் தந்தது அந்தக் குஞ்சின் மாற்ற முடியாத இயலாமை எனக்குத் துக்கத்தைத் தந்தது ஒரு தோட்டாவால் உடனடியாக முடித்து வைக்க வேண்டிய அளவு துக்கம் அந்தக் குஞ்சின்…