லல்லா கவிதைகள்
(1)
தென்புல மேகங்களை
கலைந்தோடச் செய்வேன்.
கடலை வற்ற வைக்கவும்
கைவிடப்பட்ட நோயாளியைக்
குணப்படுத்தவும் கூட
என்னால் ஆகும்.
ஆனால், ஒரு முட்டாளின்
எண்ணப்போக்கை
மாற்றுவதென்பதோ
என் சக்திக்கும் அப்பாற்பட்டது. (2)
விளையாட்டாக
என்னிடமிருந்து நீ
ஒளிந்துகொள்கிறாய்!
நாள் முழுவதும்
நான் தேடுகிறேன்
பிறகு,
நானேதான் நீயென்பதை
அறிகிறேன்.
அந்தக் கொண்டாட்டம்
இப்போது
ஆரம்பித்துவிட்டது. (3)
பொதுச்சாலை வழியேதான் வந்தேன்
ஆயினும் அதன் ஊடாகத் திரும்பிப் போகவியலாது
பயணத்தின் நடுவே
பாதிவழியில் நிற்கிறேன்.
பகல் முடிந்து இரவு தொடங்குகிறது.
எனது பைகளைத் துழாவுகிறேன்
ஒரு நாணயமும் கிடைக்கவில்லை,
பயணச் செலவிற்கு
எதை நான்
பகிர்ந்தளிப்பேன்? • லல்லா என்கிற லல்லேஸ்வரி இந்திய பக்தி மரபை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராவார். காஷ்மீரில் உள்ள பாண்டிர்தன் என்கிற சிற்றூரில் 1320 ல் பிறந்த இவர்,…
க.மோகனரங்கன்
1 article published