மௌன நாற்காலிகள் ஏதோ ஒரு குழந்தைதான் கடைசியாய் அமர்ந்திருக்கவேண்டும் அதன் பின் யாருமே சீண்டாத ஒரு நாற்காலியின் கதை என்னிடம் உண்டு மஞ்சளாய்க் கரை படிந்து கைப்பிடிகளின் நிறம் மங்கி அமர்ந்து அமர்ந்து வழுக்கிய இருக்கை கொஞ்சமாய் உள்வாங்கி பள்ளமாகிவிட்டது சாப்பாட்டு மேஜையின் கால்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கும் கால்கள் அதற்குண்டு அதில் உணவுக்கான தட்டை வைக்கலாம் தண்ணீர் குவளை வைக்கலாம் பால் போத்தலை வைக்கலாம் சத்தமிட்டு விளையாடும் பொம்மையை அங்கே ஒட்டி வைக்கலாம் அப்போதும் கூட…
பொம்மி என்ன பெயர் அது யாரின் பெயர் அது என எப்போதுமான கேள்வி ஒன்று என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது இனிமேலும் ஓட முடியாது ஓடுவதற்கு தூரமும் கிடையாது ஒரு குழந்தையை நீங்கள் எப்போது தூக்கிக் கொஞ்சினீர்கள் எப்போது கண்டித்தீர்கள் எப்போது குதிரை ஏறி விளையாட்டு காட்டினீர்கள் எப்போது சிரிக்க வைத்தீர்கள் உங்கள் உள்ளங்கை குழந்தையின் சூட்டை எவ்வளவு நேரம் சேமித்தது எனக்கு இன்றுவரை அது சேமிப்பிலேயே இருக்கிறது கூடவும் இல்லை குறையவும் இல்லை கொஞ்சமும் மாறாத…