இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள் என்று சொல்வதைவிடவும், இலக்கியத்தை ஒரு கோட்பாடாக்கி விளக்கிவிட நினைப்பவர்கள் என்று சொல்லலாம். கவிதைகள் எவற்றை எழுதிக்காட்டுகின்றன? இந்தக் கேள்விக்குத் தவிப்பை - தேடலை - தேடலின் வலியை- தடையை - தடைகள் ஏற்படுத்தும் அச்சத்தை-…
அ.ராமசாமி
1 article published