ஊஞ்சல் மண்டபம்

ஆயிரமாயிரமானோர் கூடிக் கலையும் ஊஞ்சல் மண்டபத்தில் சமநிலை எங்கேயிருக்கிறது ஆயிரமாயிரமான கதாபாத்திரங்கள் கதைகளாகும் யாளித் தூண்களின் நடுவே சம நோக்கு எங்கேயிருக்கிறது யாரை நோக்கி இந்தக் கேள்விகளைக் கேட்பேன் நான் யாரிடமிருக்கிறது சமநிலைக்கான அக்கறைகள் என் கன்னக்கதுப்புகளில் துறவறத்தின் ரேகைகள் தோன்றிவிட்டனவா நீ அடையாளம் கண்டுவிட்டாயா நான் எப்போதுமே மண்டபத்துக்கு வெளியில் நிற்பவன்தானே இறைவனின் கல்யாண கோலமும் கூட்ட நெரிசலும் கலைய எப்போதும் காத்திருப்பவன் நான் முதலில் வருபவன் என்றாலும் கடைசியில் தாமதமாய்ச் சென்றடைபவன் எல்லாவற்றிலும் தாமதம் … Continue reading ஊஞ்சல் மண்டபம்