தாகம்

இப்போதெல்லாம் எவ்வளவு தாகமாய் இருக்கிறது தெய்வீகக்காதல் கதையொன்றைக் கேட்பதற்கு ஆனாலும் இரவின் நிறம் அடரும் சுவர்களுக்குக்கூட உன்னையும் என்னையும் பற்றி நான் ஏன் சொல்லக் கூசுகிறேன் ஒரு இரகசியம் நழுவி நோக்கமற்ற குமிழியாய் உடைந்து வர்ணஜாலமிழக்கும் நீர்த்திவலைகளாவதை நான் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது உன் கூந்தலின் வருடலில் என் மார்க்காம்புகள் சிலிர்த்ததை யாருக்கு நான் சொல்ல வேண்டும் யாருக்கு நான் சொல்லமுடியும் நள்ளிரவில் வரும் உன்  தொலைபேசி அழைப்புகள் கூட நம்முடைய உன்மத்த கூடலையே ஒத்திருக்கின்றன சொற்களால் … Continue reading தாகம்